தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குநர் மற்றும் சமூக விழிப்புணர்வுச் செயல்பாடுகளுக்காக அறியப்பட்ட பா. ரஞ்சித், கடந்த காலங்களில் பல்வேறு சமூக முன்னெடுப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நேற்றைய தினம், அவரின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ஆண்டு விழா 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு, 6வது முறையாக வெற்றிகரமாக தொடங்கியது.

இந்த நிகழ்வு சமூக கலைவழி மாற்றத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பதால், தமிழ் திரையுலகிலும், சமூக வட்டாரத்திலும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில், இயக்குநர் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பெருமிதத்துடன் நிகழ்வை தொடங்கி வைத்தனர். நிகழ்வின் ஆரம்பநிலையில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டதன் மூலம் விழாவின் முக்கியத்துவம் மேலும் உயர்ந்தது.

வெற்றி மாறன், தொடக்க விழாவில் பேசுகையில், பா. ரஞ்சித்தின் சமூக விழிப்புணர்வு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவர் அதன்போது, "‘மார்கழியில் மக்களிசை’ என்பது ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான். பா. ரஞ்சித்தின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முன்னெடுப்பும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன.
இதில் மிக முக்கியமானது, இங்கு எந்தக் கலைக்கு மேடையை அமைத்துக் கொடுக்குது என்பதுதான். இங்கு பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கலைஞர்களின் நோக்கம் சினிமா கிடையாது. அவர்களுடைய நோக்கம் சமூக மாற்றம் மட்டுமே. இங்கு கேட்ட அத்தனை பாடல்களும் சமூக மாற்றத்திற்கான பாடல்களாகத்தான் இருந்தன. மாற்றம் விரைவில் வரணும்!" என்று கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!