• Jan 19 2025

கோபி போட்ட போடுற தலை குனிந்த செஃப்... ராதிகா கொடுத்த வார்னிங்க்! பாக்கியாவுக்கும் காதல் வந்துடுச்சு..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோபி கிச்சனில் ராதிகாவும் இருக்க, தான் எல்லாருக்கும் சாப்பாடு அனுப்பியாச்சு உன் ஆபிஸ்க்கும் சாப்பாடு அனுப்பியாச்சு என கோபி சொல்ல, ஓகே என ராதிகா சொல்கிறார்.

அதற்கு, ஓகே தானா? நல்லா பாராட்டணும் என சொல்ல, நீங்க என்ன சின்ன பேபியா எல்லார் கூடவும் அளவா இருக்கனும், கொஞ்சம் கண்டிப்பா இருக்கனும் என சொல்ல, அவ்வளவு தானே என செஃப்பை கூப்பிட்டு வைத்து திட்டுகிறார். இதை பார்த்து ராதிகா ஷாக் ஆகிறார். அதன் பின்பு அவரை ராதிகா அனுப்பி வைக்கிறார்.

இதையடுத்து பாக்கியா, பழனிச்சாமி பிறந்த நாளுக்கு சமைப்பதற்காக மெனுவை ரெடி பண்ணுகிறார். இதனால் அவர் தனியாக இருந்து சிரித்து சிரித்து எழுதுவதை பார்த்த செல்வி, அக்காக்கும் ஆசை இருக்கு ஆனா சொல்ல மாட்டா என அமிர்தாவிடம் பேசிக் கொள்கிறார்.


இன்னொரு பக்கம் 7 மணிக்கு வருவேன் என சொன்ன செழியன் வரவில்லை என்று, ஜெனி வாசலையே பார்த்துக் கொண்டு இருக்க, அவன் வருவான் தானே என ஈஸ்வரி சொல்லுகிறார்.

வீட்டுக்கு வந்த பாக்கியா, நாளைக்கு பழனிச்சாமி சேருக்கு பிறந்த நாள், சாப்பாடு ஓடர் தந்து இருக்கு என சொல்ல, அந்த தம்பி பிறந்த நாளுக்கு எல்லாரும் போகணும் என ஈஸ்வரி சொல்லுகிறார்.

இறுதியாக பாக்கியாவும், அமிர்தாவும் ரெஸ்டாரண்டில் இருந்து வந்த பின்பும் செழியன் வரவில்லை. 8 மணியை கடந்த பின்பு அவர் வர, கோவத்தில் ஜெனி ஒன்றும் பேசாமல் உள்ளே எழுந்து சென்று விடுகிறார். இதனை பார்த்த பாக்கியா, இனி லேட் ஆகிச்சு என்றா ஜெனிக்கு ஒரு கால் பண்ணி சொல்லு, இப்போ பிரெஷ் ஆகிட்டு சாப்பிட வா, ஜெனியை போய் சமாதானம் பண்ணு என சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement