தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பு, வலிமையான குணாதிசயம், நேர்மையான பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அர்ஜுன். சமீபத்தில் அரசியல் குறித்த தனது ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அர்ஜுன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அரசியலுக்கு அழைக்கப்பட்டாலும், தன்னால் அதில் கலந்து கொள்ள முடியாத காரணங்களைப் பற்றி மிக நேர்மையாகப் பேசினார்.
அர்ஜுன் அதன்போது, " நிறைய பேர் என்னை அரசியலுக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் அரசியலில் தட்டிக் கேட்க முடியாது. மேலிருப்பவர்கள் சொல்வதை கேட்க சொல்லுவார்கள். இப்போ இருக்கிற அரசியல் எல்லாம் பணம் தான். மேலிடம் சொல்லுறதுக்கு எல்லாம் ஜின்க் ஜாக் போடணும். அது என்னால் முடியாது." எனக் கூறியுள்ளார்.

இந்தப் பேச்சு, அரசியலில் நடக்கும் பின்புலம் குறித்த உண்மைகளை வெளிப்படுத்துகிறது. அர்ஜுன் தனது திரைப்பட வாழ்க்கையில் தனது நேர்மையான நடிப்பு மற்றும் சமூக உணர்வு கொண்ட கதாபாத்திரங்களால் பிரபலமானவர்.
அவர் நடித்த சில திரைப்படங்கள், குறிப்பாக சமூக நீதி, சாதி, பண்பாடு, அரசியல் மற்றும் சமூகவியல் பிரச்சினைகளை திறம்பட விவாதித்துள்ளன. அதனால் தான், அவர் அரசியல் குறித்த கருத்தை வெளிப்படுத்தும் போது, மக்கள் அதிக கவனத்துடன் அதை ஏற்கின்றனர்.
Listen News!