• Nov 26 2025

‘லாக்டவுன்’ திரைப்படத்தின் “கனா” பாடலுக்கு இப்டி ஒரு வரவேற்பா.? ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 28 minutes ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்களுக்காக தற்பொழுது உருவாகி வரும் ‘லாக்டவுன்’ திரைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துக் கொண்டு வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகிய இந்த படம், முன்னணி நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சினிமா ரசிகர்களை கவரவிருக்கிறது.


நேற்றைய தினம் வெளியாகிய இப்படத்தின் முதலாவது பாடல் “கனா” தற்போது யூடியூபில் ரசிகர்களிடையே அதிகளவான லைக்குகள் மற்றும் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த பாடல் வெளியிடப்பட்ட உடனேயே இணையத்தில் வைரல் ஆகி, ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்தப் பாடல் இசை ரசிகர்களின் உள்ளத்தை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதன் லிரிக்ஸ் சாதாரணமாக இருக்காமல், படத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துகிறது.


‘லாக்டவுன்’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ளார். அவரது தனித்துவமான இயக்கமும், கதை விவரிக்கும் விதமும் படத்திற்கு தனிச்சிறப்பை சேர்க்கிறது.

‘லாக்டவுன்’ திரைப்படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ரிலீஸ் தேதி முன்னதாக பாடல் வெளியீடு மற்றும் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.

Advertisement

Advertisement