தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ அடுத்தடுத்து பேசுபொருளாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த ஆக்ஷன் காமெடி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் சென்ராயன் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நிகழ்வில் உரையாற்றிய அவர், தன்னுடைய மனநிலையில் ஏற்பட்ட உணர்ச்சியை வெளிப்படுத்திய விதமே ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது. தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சென்ராயன்,“கீர்த்தி சுரேஷ் சூப்பரா நடிப்பாங்க, டான்ஸ் பண்ணுவாங்க, எல்லாம் செய்வாங்க.
ஆனா இந்த படத்தில கீர்த்தி மேடம் கார் சூப்பரா ஓடி இருப்பாங்க” என்று பெருமிதத்துடன் கூறினார். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்துக்காக தனது உழைப்பை அதிகளவில் கொடுத்துள்ளார்.

சென்ராயன் தொடர்ந்து பேசும்போது, “ட்ரெய்லரை பார்க்கும் போது அழுகை வருது… ஏன்னா… அவ்வளவு கஷ்டப்பட்டு நான் நடிச்சேன். படம் ரொம்ப சூப்பரா வந்துருக்கு… என்னோட கரெக்டர் ரொம்ப சூப்பரா இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
ஒரு நடிகராக தனது வேடம் இப்படத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும், இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் சென்ராயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் இப்படம் நவம்பர் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!