பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சக்திவேல் பழனி கிட்ட கதிர் கடைக்கு வந்து என்ன சொன்னான் என்று கேட்க்கிறார். மேலும் இவங்க எல்லாம் எதுக்காக இப்புடி செய்து கொண்டு திரியுறாங்க என்று கேட்கிறார் சக்திவேல். அதைக் கேட்ட சுகன்யா கைக்குள்ளேயே இருந்தவர் கையை மீறி போய்ட்டார் அதுதான் பிரச்சனை என்கிறார். பின் காந்திமதி முத்துவேல் கிட்ட கடைக்கு இடம் பார்க்கும் போது கொஞ்சம் ஜோசிச்சுப் பார்த்திருக்கலாம் என்கிறார்.

அதைக் கேட்ட முத்துவேல் நீ வேற தொடங்காத ஆத்தா என்கிறார். பின் சுகன்யா போட்டியா கடை துவங்கிட்டோம் என்றதுக்காக அவங்க எங்களை ஏதாவது செய்திடமாட்டாங்களா என்று கேட்க்கிறார். அதுக்கு சக்திவேல் அவங்க ஒன்னும் செய்யமாட்டாங்க என்கிறார்.
பின் பழனி தன்னை போய் சந்தேகப்பட்டுட்டாங்களே என்று சொல்லி கவலைப்படுறார். அதைப் பார்த்த சக்திவேல் இதெல்லாம் உன்ர நல்லதுக்கு என்று நினைச்சுக்கோ என்கிறார். அதனை அடுத்து மயில் சரவணனைப் பார்த்து வீட்டுப் பிரச்சனையை யோசிக்காமல் இருங்க என்கிறார். அதைக்கேட்ட சரவணன் இங்க வந்து சொற்பொழிவு செய்யாமல் போ என்கிறார்.

மேலும் சரவணன் உன்ர உண்மையையும் நான் வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லுவேன் என்கிறார். அதனை அடுத்து, கதிர் ராஜிகிட்ட கடையில நடந்த பிரச்சனை உனக்கு எப்புடித் தெரியும் என்கிறார். அதுக்கு ராஜி சுகன்யா சித்தி சொன்னாங்க என்கிறார். இதனைத் தொடர்ந்து செந்தில் மீனா கிட்ட எல்லா வேலையையும் தானும் சேர்ந்து செய்யுறேன் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!