• Nov 26 2025

நாலு தெருவில் பிச்சை எடுத்தேன்! கவின் உழைப்பில் நெல்சன் செய்த சம்பவம்.?

Aathira / 30 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் கவின். இவர் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளி திரையில்  கலக்கிக் கொண்டிருக்கின்றார். கடந்த வாரம் இறுதியாக  இவருடைய நடிப்பில் மாஸ்க் படம் வெளியானது. 

மாஸ்க் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்க, நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.  பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது. 

கவின் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான  திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.  எனினும்  ஸ்டார், ப்ளடி பேக்கர் ஆகிய படங்கள்  பெரிதளவில் பேசப்படவில்லை. 


இந்த நிலையில், ப்ளடி பேக்கர் படத்திற்காக உண்மையிலேயே பிச்சை எடுத்ததாக கவின் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், எனக்கு ஒவ்வொரு மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டே இருந்தாங்க..  எனக்கும் கூட ஒரு பிச்சைக்காரன் மாதிரி பீல் ஆகவே இல்லை.. அதனால நான் உண்மையிலே நாலு தெருவுக்கு போய் பிச்சை எடுத்துட்டு வந்தேன்.. அதுல ஒரு அக்கா மட்டும் 20 ரூபாய் பிச்சை போட்டாங்க.. அதை எடுத்துட்டு வந்து இவங்க கிட்ட காட்டினா, நெல்சன் அண்ணா அதையும் வாங்கிட்டாரு  என்று தெரிவித்தார்.. 




Advertisement

Advertisement