• Apr 26 2026

'கோட்’ படத்தை அடுத்து ‘தலைவர் 171’ படத்திலும் மைக் மோகனா? வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் மைக் மோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

முதல்முறையாக ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தலைவர் 171’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்க இருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் ரஜினி மகளாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் தற்போது மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் ’கோட்’ திரைப்படத்தில் மோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக ‘தலைவர் 171’ படத்திலும் நடிக்க உள்ளார். 

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் ஒரு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படமும் ’ஜெயிலர்’ படம் போலவே ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement