டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பரபரப்பாக, ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 9 இலிருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர் கெமி, தனது அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்போது அவர் கூறிய சில உணர்ச்சிபூர்வமான கருத்துகள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நேர்காணலில் கெமி தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, “நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கவேணும் என்று ரொம்ப ஆசை இருந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், " இதுக்கு மேல நாம இனி positive-ஆ தான் யோசிக்கணும் என்றார். மேலும் திவாகரை நான் தப்பா சொல்லல ஆனா அவர் கண்ணைப் பார்த்து பேசமாட்டேன் என்கிறார் அது தான் கண்ணைப் பார்த்துப் பேசுங்க என்று சொன்னேன் அவ்வளவு தான். அத்துடன் நான் அங்க காசுக்காக தான் போனேன். திரும்ப உள்ள போகணும் என்று ரொம்ப ஆசைப்படுறேன். " என்றார்.

அத்துடன், பிரஜன் wife சாண்ட்ராவிற்கு சப்போர்ட் பண்ணுறார். அவங்க ரெண்டு பேரும் தனியா game விளையாடினால் ரொம்ப நல்லா இருக்கும். " எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!