விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக நடிகை வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் ப்ரஜின், சான்ட்ரா, திவ்யா கணேசன், விக்ரம் உள்ளிட்ட 10 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்ததில், குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக கெமி வெளியேற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கெமி மேடையில் அருகே நின்று பேசும் போது, பிக் பாஸ் வீட்டை நினைத்து கண்கலங்கினார். மேலும் நிஜ வாழ்வில் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும், ஒருவேளை மட்டுமே சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது கண் கலங்கிய கெமிக்கு தனது கண்ணாடியை கழட்டி கொடுத்து விஜய் சேதுபதி அவரை உற்சாகப்படுத்தி போட்டியார்களுடன் சந்தோஷமாக பேச வைத்து வெளியே அனுப்பி வைத்தார்.

அவர் புறப்படும் போது மேடையில் இருந்து இறங்கியதும், இந்த கண்ணாடியை எடுத்துக் கொள்ளவா என கேட்டார். அதற்கு, தாராளமாக இது என்னுடைய உழைப்பில் வாங்கியது. அதனை உங்களுக்கு பரிசாக தருகின்றேன் என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டார். மேலும் அது துபாயில் வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், போட்டியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, கொடுக்க வேண்டும் என்ற மனம் தான் முக்கியமே தவிர எங்கு வாங்கியது எவ்வளவு வாங்கியது என்பது முக்கியமில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கெமிக்கு விஜய் சேதுபதி வழங்கிய கண்ணாடியின் விலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி துபாயில் அந்த கண்ணாடியின் விலை சுமார் 18000 எனக் கூறப்படுகிறது.
Listen News!