• Apr 15 2026

ஜனநாயகன் படத்தை மிஸ் பண்ணிய முனீஸ்காந்த்.. என்ன காரணம் தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து மெல்ல குணசித்திர கதாபாத்திரங்கள், வில்லன் கேரக்டர்,  நாயகன் அவதாரம் என்று வளர்ந்தவர்கள் ஏராளம்.  அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி, காளி வெங்கட்,  தினேஷ், சதீஷ் உட்பட  சிலரை சுட்டிக்காட்ட முடியும். 

அந்த வகையில்  இவர்களோடு பழகிய பலரில் ஒருவர் தான் நடிகர் முனீஸ்காந்த். அதன் பின்பு ராட்சசன்  உட்பட சில படங்களில் சீரியஸாக நடித்த போதும் இவர் நகைச்சுவை கேரக்டர்களுக்கே  முக்கியத்துவம் கொடுத்தார். 

இதைத்தொடர்ந்து  மிடில் கிளாஸ் என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்தார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கினார். அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். 

நடுத்தர மக்களின் வாழ்க்கை அனுபவங்களை சொல்கின்ற வகையில்  டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன் போன்ற படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது மிடில் கிளாஸ் படமும்  காணப்படுகின்றது. 


இந்த நிலையில்,  ஜனநாயகன் படத்தில் நடிக்க  நிறைய முயற்சி செய்தேன். அந்தப் படத்தின் இயக்குநரை சந்தித்து வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டேன். விஜயின்  கடைசி படம் இது என்பதால் கூட்டத்தில் நிற்பது போன்ற ஒரு காட்சியிலாவது வையுங்கள் என கேட்டேன். அவரும் சரி என சொல்லி எனக்கு ஒரு கேரக்டரும் ஏற்பாடு செய்தார். 

ஆனால் வேறு ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் மிஸ் செய்து விட்டேன். அது எனக்கு வருத்தமாக இருக்கின்றது என்று நடிகர் முனீஸ்காந்த்  தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement