தெலுங்கு திரையுலகில் தற்போது அதிக வரவேற்பைப் பெற்ற முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் கீர்த்தி ஷெட்டி. மிகக் குறைந்த காலத்தில் பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கிய இவர், தனது அழகு, நடிப்பு திறன், மற்றும் கதாபாத்திரத் தேர்வு ஆகியவற்றால் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளார்.

கீர்த்தி ஷெட்டி முதன்முதலில் தெலுங்கில் நடித்த ‘உப்பென்னா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம், ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஷியாம் சிங்காராய்’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டு படங்களே கீர்த்தி ஷெட்டியை தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்த்தியது.

தெலுங்கு சினிமாவைத் தாண்டி, தமிழ் திரையுலகிலும் கீர்த்தி தற்போது பிரபலமாகி வருகிறார். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவான ‘தி வாரியர்’ படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் கீர்த்தி தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
கீர்த்தி தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படத்திலும் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் முதன்முதலாக கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கும் கீர்த்தியின் கதாப்பாத்திரம் குறித்து ஏற்கனவே ரசிகர்களிடையே பேசுபொருளாக உள்ளது.
சமீபத்தில் கீர்த்தி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஸ்டைலிஷான உடை, அழகு மற்றும் வித்தியாசமான லுக்குடன் அவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து கொள்ளும் வகையில் உள்ளன. வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!