தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன், தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட சமீபத்திய பேட்டி ரசிகர்களின் மனதைத் தொட்டுள்ளது.

பல தசாப்தங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்துவரும் அர்ஜுன், சினிமா மூலம் தனக்கு கிடைத்த மரியாதையைப் பற்றி பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.
அர்ஜுன் அதன்போது, “நான் காரில் செல்லும் போது நிறைய இடங்களில் பொலிஸ் நிறுத்துவாங்க. கண்ணாடியை இறக்கியவுடன் என்னைப் பார்த்தவுடனே ‘சார் நீங்களா? Sorry சார்… தெரியாம நிறுத்திட்டேன்… நீங்க போங்கன்னு சொல்லுவாங்க.” என்றார்.

அவர் தொடர்ந்து, “நிறைய பேர் உங்களைப் பார்த்துத் தான் சார், பொலிஸாக வேண்டும் என்று ஆசை வந்ததுன்னு சொல்லுவாங்க. அதுமட்டுமல்ல, இராணுவத்தினரை சந்திக்கும் போது நிறைய பேர் உங்களுடைய படம் பார்த்து தான் சார் இராணுவத்தில் சேர்ந்தேன் அப்படின்னு சொல்லுவாங்க. அதெல்லாம் கேட்கும் போது ரொம்ப பெருமையா இருக்கும். அத்துடன், தேசப்பற்று படத்தில நடித்ததை நினைச்சு ரொம்ப சந்தோசப்படுறேன். " எனவும் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் கூறியபடி, அவரது வாழ்க்கையில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தேசப்பற்று படங்களுக்கு கிடைத்த வரவேற்பு அவரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!