விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 52வது நாளில் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் இடம் பெற்று வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் ஆவலுடன் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய நாளில் வெளியான முதலாவது ப்ரோமோவில், அமித்தின் ஷூவை வியானா ஒளித்து வைக்கின்றார். இதனால் கனி பல இடங்களில் தேடியும் அது கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்தில், முதுகு வலிக்கின்றது என்று அமித் கத்திக் கொண்டு இருக்க, ஷூ உன்கிட்ட தான் இருக்கா? என்று வியானாவிடம் அரோரா கேட்கின்றார்.

அதன் பின்பு வியானா கட்டிலுக்கு அடியிலிருந்து ஷூக்களை எடுக்க, இது விசித்திரமான கேம் பிளேயா இருக்குது. ஒருத்தரை நோகடித்து இப்படி விளையாட கூடாது என்று சொல்லுகின்றார் அமித்.
மேலும் நான் காலையில இருந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறேன் என்று கோபத்தில் வெளியேறுகின்றார். எனினும் நான் இப்படித்தான் ஹாஸ்டலில் விளையாட்டாக பண்ணுவேன் என்று சொல்கின்றார் வியானா.
இதற்கிடையில், இப்படி திருடுவது எந்த ஹாஸ்டலில் நடக்கிறது என்று சாண்ட்ரா கனியுடன் பேசிக்கொள்கின்றார். மேலும் இது பேட் பிஹேவியர் என்று பார்வதியும் சொல்லுகின்றார். இதனால் கண்ணீர் விட்டு அழுகின்றார் வியானா.
Listen News!