தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்திய நேர்காணலில் தெருநாய்களுக்கு எதிரான தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தற்பொழுது சமூகத்தில் எழும் இந்த விவாதத்தை ஆழமாக புரிந்து, இரண்டு பக்கங்களையும் சரியாக பார்த்து அணுகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ், பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை. இந்நிலையில், தெருநாய்கள் குறித்து அவர் தனது பார்வையை சிறப்பாக சமூக ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது, " தெரு நாய்களுக்கு எதிரான தீர்ப்பைப் பார்த்து ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா, அதோட மறுப்பக்கத்தையும் பார்க்கணும். ஏன்னா, என்னோட ட்ரைவரோட சின்ன பசங்க ரோட்டில போகும் போது ரெண்டு தடவ தெரு நாய் கடிச்சிருக்கு. தெருநாய் எல்லாம் பாவம்னு சொல்லுறோம்.
ஆனா, நமக்கு தெரிச்சவங்களுக்கு நடந்தா தான் புரியுது. அதோட எச்சிலோ, ஒரு நகம் பட்டால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்குனு சொல்லுறாங்க. அதனால அதனோட பாதிப்பு எப்படி இருக்கும்னு நமக்குத் தெரியாது. அதையும் நாம பார்க்கணும்." என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இத்தகைய கருத்து, நடிகையின் சமூக உணர்வை வெளிப்படுத்துகிறது. அவர் கூறியது போல, தெருநாய்களைப் பலர் பாவம் என்று மட்டுமே கருதப்படுகின்றனர், ஆனால் உண்மையில் அவற்றால் நடக்கும் செயல்கள் மற்றும் பாதிப்புகளை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
Listen News!