விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9, தற்போது மிகுந்த பரபரப்பும், சண்டையும், உணர்ச்சிப் பொங்கல்களும் நிறைந்த சூழலில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய திருப்பம், புதிய Task, புதிய எமோஷன்கள் என ரசிகர்களை கவர்ந்திழுக்கும் இந்த சீசனில், தற்போது நிகழ்ச்சியை மேலும் கலக்கச் செய்வதற்கான ஒரு Special entry நிகழ்ந்துள்ளது.

இன்றைய ப்ரோமோவில் கீர்த்தி சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரவேசிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் முழுக்க முழுக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த போது கீர்த்தி சுரேஷ் மிகுந்த உற்சாகத்துடன், “இந்த வீட்டை நேரில் பார்க்க ரொம்பவே excited-ஆ இருந்தேன்!” என்று கூறியுள்ளார்.
போட்டியாளர்களை சந்தித்த போது கீர்த்தி சுரேஷ், “உங்கள் எல்லாருக்கும் ரொம்ப fans இருக்காங்க.." என்று கூறினார். அப்புடியே, கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருக்கிற போட்டியாளர்களுடன் தன்னுடைய பாடலுக்கு டான்ஸ் ஆடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இதுதான் தற்பொழுது வெளியான ப்ரோமோ.
Listen News!