விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 தற்போது இரண்டு மாதத்தை எட்ட உள்ள நிலையில், டாஸ்க்குகள் மேலும் சூடுபிடித்துள்ளன. ஆரம்பத்தில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், இன்றுவரை 9 பேர் வெளியேறிய நிலையில், போட்டி தற்போது அதிக மாறுபாட்டை பெற்றுள்ளது. சமீபத்தில் கெமி எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

ஒவ்வொருவரும் தங்களின் திறமை, புத்திசாலித்தனம், உணர்ச்சி கட்டுப்பாடு போன்றவற்றை நிரூபிக்க வித்தியாசமான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான டாஸ்க் “ஸ்கூல் டாஸ்க்” என பெயரிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பள்ளி மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் கதாபாத்திரங்களை ஏற்று விளையாடி வருகின்றனர்.

டாஸ்க்கின் போது மாணவர் கதாபாத்திரத்தில் இருந்த வினோத், திடீரென ஒரு உணர்ச்சி மிகுந்த உரையை கூறினார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அவர் அதன்போது, “நீ கற்ற கல்வி உன் சமூகத்திற்கு பயன்படவில்லை என்றால், நீ சாவதே மேல் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருக்கிறார். அதனால் நான் படித்து, மக்களுக்கு என்னால் முடிந்ததை கற்றுக் கொடுப்பேன்.” எனக் கூறியிருந்தார்.
இந்த ஒரு வரி சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பலர் வினோத்தின் இந்த சிந்தனையை பாராட்டி வருகின்றனர்.
Listen News!