தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்து வரும் நடிகராக உருவெடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கிய LIK திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் மேலும் ஒரு மாபெரும் சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைப்பார் என்று நம்பப்படுகின்றது.
ஏற்கனவே ஹீரோவாக நடித்த முதல் மூன்று படங்களையும் 100 கோடி படங்களாக கொடுத்த சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்தார். அதன் பின்பு ஒரே வருடத்தில் மூன்று படங்களில் 100 கோடி ரூபாய் கொடுக்கும் சாதனையைப் படைக்கும் வாய்ப்பும் பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்தது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தான் டிராகன் படம் வெளியானது. இந்த படம் 150 கோடி வரை வசூலித்தது. அதன் பின்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டியூட் படமும் 100 கோடி படமாக அமைந்தது. டிசம்பர் 18ஆம் தேதி அவருடைய அடுத்த படமான எல்ஐகே ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு தற்போது மிகப்பெரிய ஹைப் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், LIK திரைப்படத்தின் மூலம் ஒரே வருடத்தில் 300 கோடி ரூபாய் வசூலை தமிழ் சினிமாவிற்கு பெற்றுத் தரப் போகின்றார் பிரதீப் ரங்கநாதன் என்ற பேச்சு பரவலாக காணப்படுகின்றது. இது வளர்ந்து வரும் ஹீரோ செய்யும் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. அப்பேற்பட்ட விஷயத்தை பிரதீப் ரங்கநாதன் செய்து சாதனை படைத்து வருகின்றார்.
மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படங்கள், இந்த வருடத்தில் மட்டும் தமிழ் சினிமாவிற்கு 260 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. அடுத்ததாக வெளியாக உள்ள படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் சீரியஸான ஆக்சன் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!