பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசனில் இறுதியாக கெமி வெளியேறி இருந்தார். திவாகரை அடுத்து அவருடைய தங்கை விஜே பார்வதி வெளியேறினால் சூப்பராக இருக்கும் என்று பார்வையாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் பார்வதிக்கு மாறாக கெமி தான் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கெமி தற்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதன்படி அவர் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கமருதீன் காலையில் அரோரா கூடவும் இரவில் பார்வதி கூடவும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார் .
மேலும் பிக் பாஸ் வீட்டில் ரொம்ப டாக்ஸிக்கான ஆள் என்றால் அது பார்வதி தான். பார்வதிக்கு நிறைய பேசி புரிய வச்சி இருக்கன். எல்லாம் பொறுமையா கேட்பா. ஆனால் அடுத்த நாள் அப்படியே மாறிடுவா.. ஆனா அது நல்லது இல்ல..

அத்துடன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிற எல்லாருமே fake தான் இருக்காங்க. அதிலும் குறிப்பாக சபரி ரொம்ப வித்தியாசமா இருக்காரு. எனக்கு அவர முதல்ல தெரியும். ஆனா இப்ப அவர் உள்ள வேற மாதிரி இருக்கார். ஏன் இப்படி இருக்கிற என்று தெரியல.
அதேபோல வியானா நிறைய பொய் சொல்லுவாங்க. எனக்கும் தமிழ் தெரியாது தான். ஆனால் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால் அவங்க பொய்யென்று தெரிஞ்சும் அத கியூட்னு நினைச்சு கதைப்பாங்க என்று தெரிவித்துள்ளார்.
Listen News!