தமிழ் திரையுலகில் “கேப்டன்” என்ற பெயரால் மக்கள் மனதில் என்றும் பதிந்திருப்பவர் நடிகர் விஜயகாந்த். தனது அதிரடி நடிப்பு, நேர்மை ஆகியவற்றால் ரசிகர்களிடையே எப்போதும் ஒரு தனித்திறன் கொண்ட இடத்தைப் பெற்றிருந்தார்.

அரசியல், சினிமா என இரு துறைகளிலும் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்த கேப்டன் பற்றி, இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தயாரிப்பாளர் சிவா சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பேட்டியில் பேசும் போது தயாரிப்பாளர் சிவா, " கேப்டனை திருமணம் செய்து கொள்ள பெரிய பெரிய தொழிலதிபர்கள், பெரிய ஆட்கள் எல்லாம் தங்கள் பொண்ணுக்கு என்ன வேணா செய்யத் தயாரா இருந்தாங்க. அதே மாதிரி கேப்டனுக்கு ஒரு நடிகையுடன் திருமணம் நடக்க இருந்தது. ஆனா, நண்பர் ராவுத்தர் வேணாம்னு சொல்லிட்டார். அவர் சொன்னதால எனக்கு நல்லது யோசிக்க உன்ன விட யாரு இருக்கா... சரின்னு சொல்லிட்டு அந்தக் கல்யாணத்தை வேணாம்னு சொல்லிட்டார் விஜயகாந்த்." என்றார்.
சிவாவின் கூற்றுப்படி, அந்த நாட்களில் ஒரு முன்னணி நடிகையுடன் கேப்டனின் திருமணம் முடிவாகி இருந்தது. இரு தரப்பும் சம்மதித்து, அத்தனை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்த நிலையில் நண்பனின் பேச்சால் திருமணம் செய்யவே விஜயகாந்த் மறுத்துள்ளார்.
இப்போது வெளிவந்த இந்த தகவலும் ராவுத்தரின் நெருக்கத்தையும், கேப்டன் நண்பன் மீது வைத்த நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
Listen News!