திரையுலகில் ஒரு நடிகை பெறும் சம்பளம் என்பது அவர்களின் புகழ், படங்களின் வெற்றி, ரசிகர்கள் ஆதரவு, மார்க்கெட் மதிப்பு போன்ற பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு படம் வெற்றியடையும் போதெல்லாம் சம்பள உயர்வு என்பது இயல்பான ஒன்று.

ஆனால் சிலர், படங்கள் வெற்றியடையாவிட்டாலும் கூட சந்தையில் தங்களின் மெருகை வைத்துக்கொண்டே உயர்ந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்ற கருத்தும் திரையுலகில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் டாப் 10 நடிகைகள் யார் என்பது குறித்து ரசிகர்கள் இடையே எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய சினிமாவின் பல்வேறு மொழித் துறைகளில் நடித்துவரும் முன்னணிப் பெண்மணி நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.

இப்போது இந்தியாவின் டாப் 10 பட்டியலில், பிரியங்கா சோப்ரா , கங்கனா ரணாவத் , தீபிகா படுகோன், ஆலியா பட் , கத்ரினா கஃப் , கியாரா அத்வானி, நயன்தாரா ,சாய் பல்லவி,கரீனா கபூர் மற்றும் சமந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதன்மூலம், பிரியங்கா சோப்ரா அதிகளவு சம்பளம் பெறும் நடிகையாக இடம்பிடித்துள்ளார். அத்துடன் அவர் 30 கோடி சம்பளத்தைப் பெறுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!