பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர் .
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதனால் பல படத்தின் ப்ரோமோஷன்களும் இங்கு நடைபெறுகின்றன, அந்த வகையில் சமீபத்தில் கவின் நடித்த மாஸ்க் படத்தின் ப்ரோமோசனுக்காக வந்திருந்தார் .
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இரவில் திடீரென என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ்க்கு, பிக் பாஸ் போட்டியாளர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் நடைபெறுவதால் போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் காணப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களுடன் கலந்துரையாடிய கீர்த்தி சுரேஷ், அவர்களுக்கு வெளியில் நிறைய ரசிகர்கள் இருப்பதாக கூறினார்.
மேலும் தான் நடித்த ரிவால்வர் ரீட்டா திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் அதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இறுதியில் அவர்களுடன் டான்ஸ் ஆடிவிட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
Listen News!