• Nov 26 2025

"Dude" பட பழைய பாடல்கள் நீக்கப்பட வேண்டுமா.? இளையராஜாவை கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்.!

subiththira / 23 minutes ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் சமீபத்திய திரைப்படம் DUDE தொடர்பான விவாதம் நீதிமன்றத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2025 அக்டோபர் 17 அன்று பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான DUDE படத்தில் இடம்பெற்ற 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்கள் தொடர்பாக இளையராஜா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.


இளையராஜா கோரியது, DUDE படத்தில் பயன்படுத்தப்பட்ட “கருத்து மச்சான்” மற்றும் “நூறு வருசம்” என்ற இரண்டு பாடல்களை நீக்க வேண்டும் என்பதாகும். இதற்கமைய நீதிபதி, இசையமைப்பாளரின் கோரிக்கையை ஆராய்ந்து, தற்பொழுது சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதாவது, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களை தற்போது ரசிகர்கள் கேட்டு ரசிக்கிறார்கள். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்? படம் தியேட்டரிலும் OTT-யிலும் வெளியான போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது வந்து வழக்கு தொடர்ந்தது ஏன்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். 


DUDE படத்தில் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசை ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இரண்டு பாடல்கள், “கருத்த மச்சான்” மற்றும் “நூறு வருசம்” ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதன், பாடல்களின் வரிகள் அப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


Advertisement

Advertisement