தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களையும், கடந்த கடினமான பாதைகளையும் பற்றி சமீபத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதைத் தொட்டுள்ளார்.

திரையுலகில் இன்று உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கும் பாஸ்கரின் பயணம் கடினமானது என்பதை அவர் சொன்ன வார்த்தைகள் தெரிவிக்கின்றன.
எம்.எஸ். பாஸ்கர் தனது பேட்டியில்," என்னுடைய அக்கா ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் அவங்க தான் முதலில் சினிமாவுக்கு வந்தாங்க. அவங்க கூட துணைக்கு போகும் போது யாரோ ஒரு ஆள் பேசுறதுக்கு வரலனு ஒரு படத்தில என்ன பேச சொன்னாங்க. அதிலிருந்து ஆரம்பித்தது தான்... அப்புறம் எந்த வாய்ப்பும் வராததால சேல்ஸ் மேனா போனேன்.
ஆபிஸ் அசிஸ்டெண்டா வேலை செஞ்சிருக்கேன். ஒரு பெரிய குளிர்பானங்கள் தயாரிக்கின்ற கம்பெனில ஒரே ஒரு நாள் பார்ட்டில் கழுவுற வேலை பார்த்தேன். அப்புறம் மந்தை வெளியில் மெக்கானிக் செட்டில் வேலை பார்த்தேன். " எனக் கூறியிருந்தார்.

இவ்வாறாக, சினிமாவில் தொய்வான நிலை காரணமாக பாஸ்கர் வாழ்க்கை நடத்த பல வேலைகளை செய்தார். அதைப் பற்றி அவர் மனம் திறந்து தெரிவித்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!