பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் தான் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள பெண் போட்டியாளர்கள் பலரிடமும் ஜொள்ளு விட்டுக்கொண்டு திரிந்தார். இதனால் ரசிகர்களை கடுப்பேற்றி இறுதியாக எலிமினேட் ஆகி வெளியேறினார்.
தற்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும் திவாகர், பிக் பாஸ் பற்றியும் தனது பெருமை பற்றியும் பேசிக்கொண்டு உள்ளார். அதிலும் நான் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற போவதாகவும், விஜய் சேதுபதியின் படத்தில் கட்டாயம் நாயகனாகவோ அல்லது வில்லனாகவோ நடிப்பேன் என்றும் பேசி வருகின்றார்.
இந்த நிலையில், புதிய படம் ஒன்றின் ப்ரோமோஷனுக்கு கலந்து கொண்ட திவாகர், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் , நான் பிக் பாஸ் உள்ளே சென்றபோது நிறைய லவ் சப்ஜெக்ட் பற்றி மட்டும் தான் பேசினேன். ஆனால் அவற்றை எல்லாம் ப்ரோமோக்களில் காட்டவில்லை.

அவற்றை சேனல் தப்பாக போட்டு விட்டார்கள். அதனால் தான் அந்த மேட்டர் அப்படியே அமர்ந்து விட்டது. ஆனாலும் நியூஸ்ல யூடியூப் சேனல்கள் தான் அதை எடுத்து வேற விஷயங்களை போட்டு வீடியோவை பார்க்க வைக்கிறாங்க.
இதனால் மக்களிடம் உள்ள நற் பெயர கெடுக்கிற மாதிரி பண்ணுறாங்க. அதை பார்த்து மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாம வளர்ச்சி அடைய அடைய எல்லோர் கண்ணும் எங்க மேல தான் இருக்கும். அதனால சில விஷயங்களை திணிக்கிறார்கள் . நிறைய இடங்களில் நான் கோபப்பட்டு இருக்கேன். அதுக்கு என்ன எவிடன்ஸ் இருக்கு என்று கேட்டேன். சில பேர் என் பெயரை கெடுப்பதற்காகவே வேலை செய்கின்றார்கள் என்றார்.
Listen News!