சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி பொய் சொல்லக்கூடாது என்ற கதையை சொல்லும்போது மீனா உறைந்து நிற்கின்றார். அதன் பின்பு அங்கு வந்த விஜயா, மீனா வீட்டை விட்டு வெளியேறிய விஷயத்தை பார்வதிக்கு சொல்லுகின்றார். ஆனாலும் என்ன காரணம் என்று கேட்க, எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லி கிளம்புகின்றார் மீனா .
அதன் பின்பு வீட்டுக்கு வந்த மீனா, யோசித்துக் கொண்டிருக்கும் போது அவரை பார்ப்பதற்காக சீதா வருகின்றார். அவருக்கு பின்னால் ஸ்ருதியும் வருகின்றார். சத்யாவும் வந்து, மாமா என்னை பார்த்தார். ஆனால் அவர் மீது தப்பு இல்லை என்று தோன்றுகிறது என்று சொல்லுகின்றார்.
மேலும் ஸ்ருதி முத்து குடிப்பது புதிய விஷயம் இல்லை. நான் ரவி கூட சண்டை பிடிச்சு போனபோதும் நீங்க தானே வந்து சேர்த்து வச்சீங்க. இப்ப நீங்களே இப்படி பண்ணலாமா. மேலும் வீட்டில் எல்லா வேலைகளையும் ரோகிணி பண்ணுகின்றார் என்று சொல்லிச் செல்கின்றார்.

இன்னொரு பக்கம் ரேகாவுக்கு வயிற்று வலி என்று சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகின்றார் சத்யா. இதன்போது சீதா, அவ மேல எதுவும் இண்ட்ரஸ்ட் இருக்கா என்று கேட்கின்றார். அதற்கு சத்யா இல்லை . அவள் என்னுடைய பாஸ் மகள். வருங்காலத்தில் அவ தான் எனக்கு பாஸ் எனக்கு என்று சொல்லுகின்றார்.
எனினும் சீதா, அவர் பாஸா மட்டும் இருந்தா போதும். அவள வட நாட்டுப் பொண்ணு.. பிறகு ஏதும் பிரச்சினை வந்தா உன்னை வெளுத்து வாங்குவாங்க என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
Listen News!