• Jan 18 2025

47 வயதில் சிங்கிள் லைஃபுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகுபலி நடிகர்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புதிதாக பல பிரபலங்கள்  திருமணத்தில் இணைந்தாலும், பிரபலமாக காணப்பட்ட பலர்  விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் தான் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. 

இன்னொரு பக்கம் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கு இடையே திருமண நிச்சயதார்த்தமும் விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. அவருடைய தம்பிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கு, தமிழ் படங்களில் வில்லன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் பென்மேட்சா சுப்பராஜுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது 47 வது வயதில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.


தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சமி, போக்கிரி, சரவணா, ஆயுதம், ஆதி, பாகுபலி 2, அசுரகுரு ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு கட்கன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதன் பின்பு வில்லன் கேரக்டரில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கு பாகுபலி 2 படமே மிகச் சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தற்போது இவருடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement