• Jan 19 2025

தனுஷுடன் ட்ராவல் பண்ணவே முடியாது.. அவர் சங்காத்தமே வேண்டாம்! கிளம்பிய சர்ச்சை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர்தான் தனுஷ். ஆனால் தற்போது இவருடைய வாழ்க்கையில் பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. நேற்றைய தினம் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம். இதனால் 20 வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் புட்டேஜை பயன்படுத்த தனுஷ் அனுமதிக்கவில்லை என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் சட்டபூர்வமாகவே அணுகி உள்ளார் தனுஷ். அதன்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிக்ஸ் நிறுவனம் மீது நேற்றைய தினம் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.


இந்த நிலையில், பிரபல பாடகி சுசித்ரா தனுஷ் பற்றி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில், தனுஷ் தொடர்பில் நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு தனுஷுடன் இருந்த நடிகைகளே ஆதரவு கொடுத்தார்கள். இது தனுஷை கோப மூட்டி இருக்கலாம். அவர் ஒரு சைக்கோ ஆனால் நல்லவர் போலவே இருப்பார்.

தனுஷ் சிவகார்த்திகேயனுக்கோ அனிருத்துக்கோ வாய்ப்பு ஒன்றும் கொடுக்கவில்லை. நானும் நயன்தாராவும் தனுஷின் சங்காத்தமே வேண்டாம் என்றுதான் விலகி இருக்கின்றோம். அவர் ஏமாற்றக்கூடிய நண்பர்  அவருடன் நீண்ட நாட்கள் ட்ராவல் செய்யவே முடியாது. என்னை பொறுத்த வரைக்கும் அவர் ஒரு காமெடி பீஸ் தான். ஆனால் எனது வாழ்க்கையில் சுச்சி லீக்சை செய்ததே தனுஷ் தான் என்று குறிப்பிட்டுள்ளார் சுசித்ரா.

Advertisement

Advertisement