• Jan 19 2025

96 வது ஆஸ்கர் விருது விழா.. அமெக்காவில் குவிந்த திரை பிரபலங்கள்! முழு விபரம் இதோ..

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்றைய தினம் இரவு ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளை 11ம்  தேதி காலை நான்கு மணி அளவில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 1929 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த டைரக்டர், சிறந்த இசை அமைப்பாளர் உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு  வருகின்றன.

தற்போது 96 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சின் டொல்பி திரையரங்கில் நடைபெற உள்ளது.


இந்த ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன் ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டிக்கு தயாராகியுள்ளது.

எஎம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான புவர் திங்ஸ் படம் 11 பிரிவுகளிலும், மார்டின் ஸ்கார்சஸே இயக்கத்தில் லியானோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான கில்லர்ஸ் ஆன் தி பிளவர் மூன் என்ற திரைப்படம் 10 பிரிவுகளும் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ளன.


கடந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இயக்குனர் நிஷா பஹுஜாவின் To kill a Tiger என்ற ஆவணப்படமும் சிறந்த ஆவணப் படப்பிரிவில் இடம் பெற்றுள்ளது. இது இந்திய விவசாயிகள் வாழ்க்கையில்  சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில் நகைச்சுவை நடிகரும், டாக் ஷோ தொகுப்பாளருமான ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக ஆஸ்கார் விருதை தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement