• Jan 19 2025

ஈஷா தியான மையத்தை அடுத்து கணவருடன் இன்னொரு விசிட்.. தகதகவென ஜொலித்த அமலாபால்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் சமீபத்தில் கணவருடன் ஈஷா தியான மையத்திற்கு சென்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பதை பார்த்தோம். இதனையடுத்து தற்போது மீண்டும் கணவருடன் அவர் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அவரது காஸ்டியூம் தகதக ஜொலிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் உடன் அமலாபால் நடித்துள்ள திரைப்படம்ஆடுஜீவிதம்’. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது என்பதும் அரபு நாடுகளில் ஆடு மேய்க்கும் பிருதிவிராஜ் படம் கஷ்டங்கள், தன்னந்தனியாக ஒரு பெரிய பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிய காட்சிகள் ஆச்சரியத்தக்க வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த படத்தின் நாயகியாக அமலாபால் நடித்துள்ள நிலையில் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கணவர் தேசாயுடன் அமலா பால் வருகை தந்ததை பார்த்து படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த விழாவுக்கு அமலாபால் மற்றும் அவருடைய கணவர் தேசாய் ஆகிய இருவரும் வெள்ளை உடையில் தகதகவென ஜொலித்ததும் கணவருடன் அவர் நிகழ்ச்சி முடியும் வரை கலகலப்பாக பேசி சிரித்ததையும் பார்த்த ரசிகர்கள் இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அமலா பால் சமீபத்தில் தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்த நிலையில் அவர் முகம் கர்ப்பம் காரணமாக ஜொலித்து கொண்டு இருப்பதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படம் வெற்றி பெற்றால் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அமலா பால் திரை உலகில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

Advertisement