• Mar 16 2026

விஜய் அன்டனி படத்தில் சுட்ட கதை தான்'குபேரா'.. இரண்டு பொருத்தமும் பக்கவா இருக்கே..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிக்கும் 51 வது படத்துக்கு குபேரா என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்றைய தினம் படக் குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இறுதியாக நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து அவரது 50வது  படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். அது தொடர்பான அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியானவாரே இருந்தது.

இதைத்தொடர்ந்து அவரது 51 வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வழியாக வெளியான  ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.


தனுஷின் 51வது படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஸ்மிகா மந்தாரா, நாகர்ஜுனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

குபேரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த வரையில் கிழிந்த சட்டை, அழுக்கடைந்த தோற்றத்தில் மீசையும் தாடியுமாக யாசகர் போல தனுஷ் காணப்படுகிறார்.


இந்த நிலையில், தனுஷின் குபேரா படமும், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படமும் ஒரே கதை களத்தை கொண்டவை என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஒரு கதாபாத்திரம் பிச்சைக்காரன் போலவும், மற்ற  கதாபாத்திரம் கோடீஸ்வரன் போலவும் நடித்துள்ளாராம் தனுஷ்.

அத்துடன் நடிகர் நாகர்ஜுனா "மாஃபியா டான்" பாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement