• Oct 08 2024

பத்து வருட ஏக்கம் நிறைவேறியது.. காத்திருந்து சரியான பதிலடி கொடுத்த பிரியங்கா

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தொகுப்பாளராக பலருக்கும் பரீட்சியமான ஒருவராக பிரியங்கா திகழ்ந்து வருகின்றார். இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தாண்டி டைட்டிலை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு அது இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு வாய் திறக்காமல் இருந்தார் பிரியங்கா. 

ஆனால் மணிமேகலை தனக்கு சப்போர்ட் பண்ணியவர்களுக்கு நன்றி தெரிவித்தவுடன் பிரியங்காவுக்கு சப்போர்ட் பண்ணியவர்களை சொம்பு என தெரிவித்து இருந்தார். இது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற்ற பிரியங்கா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து பலருக்கும் பதில் அளித்துள்ளார்.

அதன்படி தனக்கு சப்போர்ட் செய்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் தான் வெற்றி பெறுவதற்கு உதவி செய்து தன்னுடைய பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆனது சில வாரங்களுக்கு முன்பே தெரியும்.


டைட்டில் வெற்றி பெற்றதும் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த பிரியங்கா, தற்போது மீண்டும் சென்னைக்கு வந்திருக்கும் நிலையில் அவர் வெற்றி பெற்ற எபிசோட்டுகள் ஒளிபரப்பு ஆனது.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கிச்சன் சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற முடியாத நிலையில், இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னால் நடப்பன, பரப்பன, நீந்துவன என எல்லாவற்றையும் சமைக்க முடியும் என்று பெருமையாக கூறுவேன். எனக்கு சமைப்பதற்கு சிறப்பாக பயிற்சி அளித்த அனைவருக்கும் நன்றி. நான் ஷூட்டிங் முடித்து விட்டு எந்த நேரத்தில் வந்தாலும் என்னை உற்சாகமாக வரவேற்று எனக்கு சமையல் பயிற்சி அளித்தவர்களை நான் மறக்க மாட்டேன்.

பல நேரங்களில் நான் சமைக்கும் சாப்பாடுகளை நானே சுவைக்க மாட்டேன் அந்த சாப்பாட்டை என்னால் சாப்பிட முடியாது. ஆனால் அதன் சுவை குறைகளை சொன்ன நடுவர்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி. அத்தோடு குக் வித் கோமாளி பயணத்தில் என்னை ஊக்குவித்தவர்களுக்கும் ஆதரவளித்தவர்களுக்கும் துணை நின்றவர்களுக்கும் நன்றி.

நான் காலையில் எழுவதற்கு நீங்கள் தான் காரணம் . உங்களை மகிழ்விப்பேன் என்னைப் பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் எனக்கு துணையாய் இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி. இவ்வாறு பிரியங்காவின் தம்பி, அம்மா, தம்பியின் மனைவி, குழந்தை என எல்லோரையும் டேக் செய்து பிரியங்கா அந்த பதிவை முடித்துள்ளார்.

இதேவேளை, பிரியங்காவை பற்றி பரவி வந்த நெகட்டிவ் கமெண்டுகளுக்கும் அல்லது சர்ச்சைகளுக்கும் மணிமேகலை சொன்ன குற்றச்சாட்டுகளுக்கும் பிரியங்கா விளக்கம் கொடுக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் அவர்களின் பெரும் தன்மையை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement