• Oct 08 2024

நீண்ட வருட காத்திருப்பு.. கண்ணீரோடு சந்தோஷ செய்தியை பகிர்ந்த கன்னிகா சினேகன்! வைரல் வீடியோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சிறந்த தம்பதிகளாக பலரையும் வியக்கம் வைக்கும் வகையில் வாழ்ந்து வருபவர்கள் தான் சினேகன் கன்னிகா தம்பதிகள். இவர்கள் இருவரும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தங்களுடைய ஏழு வருட காதலை மறைத்து அதன் பின்பு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிகா, சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார். அவருக்கு ஒரு சில படங்களில் துணை கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப் பரிசு சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

அதே நேரத்தில் சினேகன் பிக் பாஸ் சீசன் ஒன்றில் இருக்கும்போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சொன்னார். ஆனால் அவர் யார் என்பது பற்றி சொல்லவில்லை. ஆரம்பத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து அதன் பிறகு பல பாடல்களுக்கு சினேகன் வரி எழுதி உள்ளார்.


90ஸ் கிட்ஸ் அதிக அளவில் முனுமுனுக்கும் பாடல்கள் இவருடையதாக தான் இருக்கும். ஆனால் இது இவர்தான் எழுதிய பாடல் என்று பலருக்கும் தெரியாது. அதை தெரிய வைக்கும் வகையில் தற்போது கன்னிகாவை திருமணம் செய்த பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் வீடியோக்களில் தான் எழுதிய பாடல் தான் என்று குறிப்பிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், நான்காவது திருமண நாளை கொண்டாடும் சினேகன் கன்னிகா தற்போது கண்ணீரோடு தாம் அம்மா அப்பா ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது கணவருக்கு முதன் முறையாக சொல்லும் போது சினேகனின் எமோஷன் மற்றும் சந்தோஷத்தை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார் கன்னிகா. தற்போது இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement