• Jan 20 2025

கல்கி படத்தில் கிருஷ்ணராக நடித்தது தமிழ் நடிகரா? வெளியான தகவல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இந்திய திரை உலகில் மிகப்பெரிய அளவில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட படம்தான் கல்கி 28 98 ஏடி திரைப்படம். இந்த படம் கடந்த 27ஆம் தேதி உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

நாக் அஸ்வின் இயற்றிய இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன் கமலஹாசன், அமிர்தாப், தீபிகா படுகோன் மற்றும் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், துல்கர் சல்மான் ஆகியோர் கேமியா ரோடில் நடித்திருந்தார்கள்.

இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களில் மட்டும் 298 .5 கோடிகளை வசூலித்துள்ளது. விமர்சன ரீதியில் இந்த படம் சற்று அடி வாங்கினாலும் வசூல் ரீதியில் சாதனை படைத்துள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் இந்த படம் 1000 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த படத்தில் மகாபாரதத்தைப் பற்றியும், புராணக் கதைகளை எதிர்காலத்துடன் இணைத்த விதமும் பாராட்டப்பட்ட வருகின்றது. குருக்ஷேத்திரப் போரில், கிருஷ்ணனும் அஸ்வத்தாமாவும் இறுதி உரையாடலுடன் இந்த படம் தொடங்குகின்றது. 

இந்த நிலையில், கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணன் ஆக நடித்தது பிரபல தமிழ் நடிகரான கிருஷ்ண குமார் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது 2010 ஆம் ஆண்டு காதலாகி என்ற படத்தில் மூலம் திரையுரையில் அறிமுகமான கிருஷ்ணகுமார், சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

தற்போது கிருஷ்ணகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்கி 28 98 ஏடி போன்ற பெரிய படத்தில் கிருஷ்ணா கேரக்டரில் நடிப்பதற்கு நான் நன்றியுடன் இருப்பேன். மேலும் தனது கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement