• Jan 21 2025

முத்து மீனாவிற்கு வந்த சந்தேகம்! மலேசியா செல்லும் குடும்பம்! அதிர்ச்சியில் ரோகிணி!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாள் எபிசோட் குறித்து பார்ப்போம். முத்து மீனாவிடம் மலேசியாவில் இருந்து வந்தவங்கள பிளைட் ஏத்துவதற்கு போயிருந்தேன் அங்கையே சாப்பிட்டேன் என்று சொல்கிறார்.


அந்த நேரம் பார்த்து மனோஜ் மற்றும் ரோகினி வர மனோஜை கூப்பிட்டு முத்து மலேசியாவில் இருந்து வந்தவங்க சொந்தக்காரங்க மலேசியா ஜெயில்ல ஏதோ பெரிய வேலை பார்க்கிறார்களாம் என்று சொல்லி ஆரம்பிக்க உடனே ரோகினி வந்து நீங்க எதுக்கு இந்த வேலை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்கிறார். எங்க பிரச்சனைல தலையிடாதீங்க என்று கோபப்பட்டு சொல்கிறார்.


அவர்கள் கிளம்பிய பிறகு மீனா அப்பா ஜெயில்ல இருந்தா எப்படி வெளிய எடுக்கலாம் என்று தானே யோசிப்பாங்க இவங்க எதுக்கு கோவப்படுறாங்க என்று கேட்க அதே டவுட்டு தான் எனக்கும் அதனால தான் எனக்கு டவுட் அதிகமாகுது. இதுல ஏதோ ஒன்னு இருக்கு நாங்க கண்டு பிடிப்பம் என்று ஜீவா கொடுத்த கண்ணாடியை எடுத்து இருவரும் மாட்டிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கின்றனர். பிறகு ஒரே நேரத்தில் முதல் விசாரணையை பார்வதி ஆன்ட்டி வீட்டில் இருந்து தொடங்குவோம் என்று சொல்கிறார். 


பின்னர் பார்வதி வீட்டுக்கு சென்ற முத்து மீனா உங்களுக்கு தான் அல்வான ரொம்ப புடிக்கல சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு அப்படியே பேச ஆரம்பிக்கிறார்கள். முத்து "என்னோட பிரண்டு நல்ல வசதியா இருக்கா ஆனா வெளிநாட்டிலிருந்து வர தமிழ் பொண்ணுதான் வேணுமா என்று சொல்லி உங்களுக்கு ஏதாவது பொண்ணு தெரிஞ்சா சொல்லுங்க மலேசியாவில் இருந்து பார்லர் அம்மா அறிமுகப்படுத்தி வச்சிங்க அது மாதிரி ஏதாவது இருந்தா சொல்லுங்க என்று சொல்கிறார்.


அதற்கு பார்வதி எனக்கு மலேசியாவில் யாரையும் தெரியாது ரோகினி மசாஜ் பண்ணிக்கிட்டு இருப்பா நல்லா பேசுவா அவ்வளவு தான் ஒரு நாள் உங்க அம்மாவுக்கு மசாஜ் பண்ணும் போது திடீர்னு போன் வந்தது அப்ப அழுதுகிட்டே மலேசியா பற்றி சொன்னா அவ்வளவு தான் எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். சரி நாங்க கிளம்பறோம் என்று சொல்ல, பார்வதி நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன் இருங்க என்று சொல்லிவிட்டு சொல்கிறார் உடனே மீனாவும் முத்துவும் எதுவுமே நம்ப நினைச்ச மாதிரி பதில் வரலையே நாங்க வித்யா வீட்டிற்கு போய் கேட்டு பார்ப்போம் என்று பிளான் போடுகிறார். 


பூ கொடுப்பது போல வித்யாவை பார்த்து கதைக்கிறார். அனால் வித்யா மாற்றி மாற்றி கதை சொல்கிறார். இதனால் மீனாவிற்கு குழப்பம் வரவே முதல்ல வேறமாதிரி சொன்னிங்க இப்ப வேறமாதிரி சொல்லுறீங்க என்று சொல்கிறார். உஷாரான வித்யா சமாளிக்கிறார். பின்னர் வெளியே வந்த மீனா முத்துவிடம் நடந்ததை சொல்கிறார். உடனே வித்யா ரோகிணிக்கு கால் பண்ணி அதிர்ச்சி ஆகாம கேளு மீனா வந்து உன்ன பற்றி விசாரிச்சிட்டு போறாங்க என்று சொல்கிறார்.  ரோகிணி இந்த விஷயம் குறித்து மனோஜிடம் சொல்கிறார். மனோஜ் உன் மாமா கிட்ட பணம் கேட்கலாம் என்று சொல்கிறார். இதனால் ரோகிணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி வருகிறது. 


இதனிடையே முத்து பேமிலி ட்ரிப் மலேசியாவுக்கு போகலாம் என்று சொல்கிறார். அங்க ரோகிணியின் வீட்டில் தங்குவோம் அப்படியே ரோகிணியின் அப்பாவை பார்த்து விட்டு வருவோம் என்று சொல்கிறார். இதனால் விஜயாவும் சரி என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி குழப்பத்தில் இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement