பிரபல நடிகர் விக்கி கௌஷல் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் வேடத்தில் நடிக்கிறார், மேலும் ராஷ்மிகா மந்தனா அவரது மனைவி ராணி யேசுபாயாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு "சாவா" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ரஷ்மிக்கா கதாபாத்திரம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படம் அடுத்த மாதம் 14ம் திகதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானநிலையில், வரும் 22-ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் விக்கி கவுசலின் படம் தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா இடம்பெறும் போஸ்டர்களை தற்போது பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் Maddock Films வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், "ஒவ்வொரு பெரிய ராஜாவுக்குப் பின்னாலும், நிகரற்ற வலிமை கொண்ட ஒரு ராணி இருக்கிறார். அந்த மகாராணியாக இருக்கும் ராஷ்மிக்காவை பெருமை படுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிரமாண்ட ஆடை, ஆபரணங்கள்வுடன் மகாராணியாக ஒலிக்கிறார் ராஷ்மிக்கா. இந்த புகைப்படங்கள் தற்போது வைராகி வருகிறது.
Listen News!