விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 92வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் முதல் ப்ரோமோவில் வையில் கார்ட் என்றி இருக்கு என பிக்பாஸ் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம்.
இந்த வாரம் வைல்ட் கார்ட் நாக் அவுட் போட்டியாளர்கள் உங்க கூட சக போட்டியாளராக மீண்டும் வரப்போறாங்க என்று பிக்பாஸ் கூறியதால் போட்டியாளர்கள் குழப்பமடைந்தார்கள். யார்யார் உள்ளே வர போகிறார்கள் என்று பார்க்க ஆவலாக ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் இந்த முறை உள்ளே வருபவர்களை ரோஸ்ட் பண்ண போட்டியாளர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறார் பிக்பாஸ். ஒரு போட்டில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டபட்டிருக்கும் அவர்களுக்கு தகுதியான ரோஸ்ட் வாசகங்களை ஒட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.
இதனடிப்படையில்" வீட்டில் யாரும் பெரியவர்கள் இருந்தா கூட்டிட்டு வாங்க இதை சாச்சனாவுக்கு தாரேன்" என்று ரயான் சொல்கிறார். "வெளியவே இருங்க அங்கதான் நல்லா பேசுவீங்க போல" என்று அருண் சுனிதாவிற்கு ஒட்டுகிறார். நல்ல பையன்னு காட்டுறதுக்கு ஒரு இமேஜை செஞ்சாரு அர்னவ் என்று அருண் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் போட்டியாளர்களுக்கு பொருத்தமானது என நினைக்கும் ரோஸ்ட் வாசகங்களை ஒட்டுகிறார்கள். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது
Listen News!