• Jan 08 2025

15 வருட காதல் கல்யாணம்! ஜோடியாக வந்து பேட்டி கொடுத்த சாக்ஷி அகர்வால்-நவநீத்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகை சாக்ஷி அகர்வால் 2 நாட்களுக்கு முன் தனது நெடுநாள் காதலர் நவநீதை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது இருவரும் ஜோடியாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். தனது காதல் குறித்தும் சினிமா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் சாக்ஷி.


நடிகை சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் மாடலிங் மூலமாக சினிமாவில் நுழைந்து இப்போது முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். இணையத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.  இந்நிலையில் சமீபத்தில்  தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்துள்ளார். தற்போது இவருடன் சேர்ந்து முதன் முறையாக மீடியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்கள். 


பேட்டியில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் தனது சந்தோசத்தினை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். " இப்போ நான் இந்த அளவு உயர்ந்து இருக்கத்துக்கு மீடியா நீங்கதான் முழு காரணம். அதுனாலதான் இந்த சந்தோஷமான விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளணும் என்று ஆசைப்பட்டேன். எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். 15 வருசமா நாங்க லவ் பண்ணிட்டு இருக்கோம். நான் இந்த மீடியாக்குள்ள வந்ததில் இருந்து எனக்கு சப்போட் பண்ணிட்டு இருக்காரு" என்று கூறினார். 


மேலும் பேசுகையில் "நவனீத்தை எனக்கு சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் இருந்து தெரியும். சினிமா பிரபலங்களை காட்டிலும் என்மேல கேர் அண்ட் சப்போட் பண்ணது இவர் தான். நாங்க இன்னும் ஹனிமூன் போக பிளான் பண்ணவில்லை. என்னுடைய மலையாளம் படம் ஜனவரி 24 ரிலீஸாக இருக்கு. தெலுங்குல ஒரு படம் பண்ணி இருக்கேன் தமிழில் 3 படம் பண்ணிட்டு இருக்கேன். திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் பயணிப்பேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Advertisement

Advertisement