• Dec 29 2025

மூன்று மாஸ் அப்டேட்களால் தமிழ் சினிமாவை உலுக்கிய லோகேஷ் கனகராஜ்.! என்ன தெரியுமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போதைய சிறந்த இயக்குநர் மற்றும் லோகி யூனிவெர்ஸின் உருவாக்குனரான லோகேஷ் கனகராஜ் தற்போது தனது அடுத்தடுத்த திட்டங்களால் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். 


அவர் இயக்கும் ஒவ்வொரு படமும், அவர் எழுதும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களிடம் அடுத்த நிலை ஹைப்பை உருவாக்குவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் பற்றிய மூன்று முக்கியமான அப்டேட்கள் ஒரே நேரத்தில் வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமான “LK 7”-இன் பணிகளை அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டார். இந்த படம் பற்றி இதுவரை எந்தப் பெரிய தகவல்களும் வெளியிடப்படவில்லை. ஆனால் இது ஒரு பெரும் பட்ஜெட்டில் உருவாகும் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், திரையுலகில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அசாத்திய முடிவை லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளார். அவர் தற்போது ‘Lokesh DC’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் லோகேஷ் நடிகராக புதிய பரிமாணத்தை காட்டப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

“Lokesh DC” படம் தற்போது ஷூட்டிங் நிலையில் உள்ளது. இந்த படம் முடிந்தவுடன் லோகேஷ் தனது பெரிய கனவு திட்டமான "கைதி-2"ற்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத் தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.       

Advertisement

Advertisement