தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை ஆர்த்தி, தனது வாழ்க்கையின் தொடக்க காலப் போராட்டங்கள் மற்றும் இன்று அவர் எவ்வாறு ஒரு பெயர் பெற்ற நட்சத்திரமாக மாறினார் என்பதைப் பற்றிய மனம் திறந்து பேட்டியில் பல உணர்ச்சி மிகுந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

வெளியில் இருந்து பார்க்கும் போது நடிகை வாழ்க்கை எளிதாகத் தெரிந்தாலும், அதற்குப் பின்னால் இருப்பது பல தியாகங்கள், விமர்சனங்கள் மற்றும் முயற்சிகள். அதை நேரடியாக அனுபவித்தவர் தான் ஆர்த்தி.
நடிகை ஆர்த்தி தனது பேட்டியில், “நான் ஹீரோயின் ஆகணும் என்று நீச்சல், உடற்பயிற்சி எல்லாம் செஞ்சி உடம்பெல்லாம் குறைச்சு போட்டோ எல்லாம் எடுத்துக்கிட்டு பாக்யராஜ் சார் கிட்ட என் போட்டோவ கொடுத்தேன்.

அவர் அதை பார்த்திட்டு "உனக்கு எதுக்கு இந்தவேலை யானை இளைச்சா எப்படி இருக்கும். முதல்ல ஒழுங்கா படினு சொன்னார். இருந்தாலும் அவர் என்னை சீரியலில ஹீரோயினா நடிக்க வைச்சார்." என்று கூறியுள்ளார்.
ஆர்த்தியின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. பலர் அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகின்றனர்.
Listen News!