தமிழ் சினிமாவில் மிக ஆழமான கதைகள் மற்றும் உணர்ச்சி வரம்புகளை மீறிய இயக்கத்தை வழங்கியவர் இயக்குநர் பாலா. அவருடைய படங்களில் ஒரு தனித்துவமான வாழ்க்கை அனுபவம் மற்றும் உண்மை என்பன காணப்படுகின்றது. இவர் ஒரு கடுமையான இயக்குநர் என்று திரையுலகத்தில் பொதுவாகவே கூறப்படுவது வழக்கம். தற்போது அதற்கு முற்றிலும் மாறான கருத்தை பிரபல சண்டைக் காட்சிகளின் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கூறியுள்ளார்.
ஒரு சினிமா நிகழ்வில் உரையாற்றிய ஸ்டண்ட் சில்வா, இயக்குநர் பாலாவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதன்போது, "பாலாவைப் பார்த்து எல்லாரும் பயப்படுவாங்க... ஆனா அவர் எவ்வளவு நல்லவர் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.மேலும் "அவரோட படத்தில் வேலை பண்ணும் போது தான் உண்மையாக வேலை செய்வது என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்" என்றார்.
ஸ்டண்ட் சில்வா கூறுயது போல , பலர் இயக்குநர் பாலாவை ஒரு "கடுமையான இயக்குநர்" என்று தான் கூறுகின்றனர். ஆனால், பாலாவின் அருகிலிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய குழுவினருக்கு மட்டும் தான் அவருடைய பாசம் தெரியும் என்றார். இந்தத் தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!