• Mar 26 2025

ஜனநாயகனுடன் மோதவுள்ள சிவகார்த்திகேயன்...! விஜய் ரசிகர்களை கதிகலங்க வைத்த படக்குழு!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் பொங்கல் என்பது எப்பொழுதும் பெரிய ஹீரோக்கள் மோதுகின்ற காலமாகவே இருந்துள்ளது. அந்தவகையில், 2026ம் ஆண்டின் பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மாஸ் கொண்டாட்டமாக அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தளபதி விஜயின் கடைசி படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படம் வருகின்ற ஜனவரி 9 அன்று திரைக்கு வரவுள்ளதாக படக்குழு கூறியிருந்தது. இதே திகதிக்குச் சமீபமாகவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படமும் பொங்களுக்கு ரிலீஸ் செய்வதற்கு படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

இதனால், இரண்டு முன்னணி ஹீரோக்கள் நேரடியாக திரைப்பரப்பில் மோதவுள்ளதாக கோலிவூட்டில் பரபரப்பாக பேசப்படுகின்றது. மேலும் இயக்குநர் சுதா கொங்கரா இதற்கு முன் சூரரை போற்று மூலம் தேசிய விருதுகளைப் பெற்றவர். தற்போது அவர் இயக்கும் ‘பராசக்தி’ என்பது ஒரு புதுமையான சமூக அரசியல் பின்னணி கொண்ட கதையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இரண்டு படங்களுமே பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக 'ஜனநாயகன்' படத்தை AGS நிறுவனமும் 'பராசக்தி' படத்தை 2D entertainment நிறுவனமும் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் 2026ம் ஆண்டுப் பொங்கல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் கூறவேண்டும்.



Advertisement

Advertisement