• Apr 19 2025

இன்ஸ்டாவைச் சூடேற்றிய சாய்பல்லவி...! புதிய லுக்கில் சும்மா மின்னுறாங்களே...!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இயற்கை அழகு மற்றும் நேர்த்தியான நடிப்பு என்பவற்றின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகை சாய்பல்லவி. தற்போது திரைப்பட சகாப்தத்தில் அதிகளவு கவனமாக இல்லாவிட்டாலும் சமூக ஊடகங்கள் வாயிலாக ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து வருகின்றார்.


அந்த வகையில், சமீபத்தில் சாய்பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு லேட்டஸ்ட் போட்டோ, ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகின்றது. இது வெளியான சில மணி நேரங்களிலே ரசிகர்கள் ஆயிரக்கணக்கான கமெண்ட் செய்து வருகின்றனர்.


சாய்பல்லவி அந்த போட்டோவில் மிகவும் ஸ்டைலான லுக்கில் தோன்றியுள்ளார். அவருடைய மேக்கப் இல்லாத இயற்கையான தோற்றம் மற்றும் அழகான சிரிப்பு என்பன அவரது இயற்கை அழகை இன்னும் உயர்த்திக் காட்டியுள்ளன.

இந்தப் புகைப்படம் சாய்பல்லவி மீண்டும் திரையுலகில் கலக்குவதற்கு ஆரம்பமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஆழமாகத் தூண்டியுள்ளது.



Advertisement

Advertisement