90 களில் பெண்களின் மனதை கொள்ளையடித்த நடிகர் ஸ்ரீகாந்திற்கு நண்பன் படத்தில் கிடைத்த வரவேற்பிற்கு பின்னர் இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் கிட் ஆகவில்லை.இந்த நிலையில் இவர் சமீபத்தில் தினசரி எனும் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இளையராஜா பாடிய தேடி தேடி எனும் பாடல் வெளியானதிலிருந்து சோசியல் மீடியாக்களில் ட்ரோல் செய்யப்பட்டது.
குறிப்பாக இப்படத்தில் நடித்துள்ள நடிகையும் தயாரிப்பாளருமான சிந்தியாவினை அவருக்கு நடிக்கவே தெரியல போன்று கமெண்ட் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த கமெண்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் பேட்டியொன்றில் உரையாடியுள்ளார்.
குறித்த பேட்டியில் ஊடகங்களிற்கு"பாகுபாடு பார்ப்பதை நிறுத்துங்கள். நம்ம ரொம்ப இனவெறி பிடித்தவர்களாக இருக்கிறோம்.மற்றவர்களை பாடி ஷேமிங் பண்றோம். எனக்கு தெரிஞ்சு மக்கள் எல்லாம் கொஞ்சம் அன்பு காட்டுனா நல்லா இருக்கும்.
நான் சோசியல் மீடியாவுல இருந்து வெளிய வந்து 16 வருஷத்துக்கு மேல ஆச்சு.கேட் பண்ணுறவங்க ரொம்ப மன உலைச்சல்ல இருக்கிறாங்கன்னு அர்த்தம் அதனால தான் ஒருத்தங்க கிட்ட வெறுப்ப வெளிப்படுத்துறாங்க அந்த ஹீரோயினுக்கு என்ன குறைச்சல் படம் வந்ததுக்கு பிறகு பாருங்க அது ரொம்பவும் நல்ல கதை"என பதிலடி கொடுத்துள்ளார்.
Listen News!