• Dec 31 2024

இது திஷா பதானியின் காதலரா? பாய் பெஸ்ட்டியா? வெளியான வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் திஷா பதானி ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் டாப் நாயகியாக வலம் வருகின்றார். இவர் சூர்யா நடித்த கங்குவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தெலுங்கில் வெளியான புரி ஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் திஷா பதானி ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஹிந்தியில் எம்.எஸ் தோனி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திஷா பதானி ஒரு கட்டத்தில் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியானபோதும் வெற்றி பெறவில்லை.


மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திஷா, அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் எடுக்கும் அதிகமான போட்டோஸ் கவர்ச்சியாகவே காணப்படும்.

இந்த நிலையில், திஷா பதாணியின் காதலர் இவரா? என வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஆனாலும் அது அவருடைய நண்பரா?  அல்லது பாய் பெஸ்ட்டியா? அல்லது காதலரா? என ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.


Advertisement

Advertisement