• Jan 19 2025

செழியன் வாழ்க்கையில் மீண்டும் திரும்பும் வசந்தம்! எழிலுக்கு சவால்விட்ட கணேஷ்! ஈஸ்வரியை வெளியே துரத்திய நீதிபதி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகியுள்ளது. 

அதன்படி, நீதிமன்றத்தில் பாக்கியா குடும்பமும், ஜெனி குடும்பமும் காணப்படுகின்றது.அப்போது நீதிபதி செழியன், ஜெனியை அழைக்க இருவரும் நீதிபதி முன்னிலையில் நிற்கின்றனர்.

இதன்போது ஜெனியின் வக்கீல், செழியன் கூட வாழ ஜெனிக்கு விருப்பம் இல்லை என வாதாட, இடையில் ஈஸ்வரி நீதிபதி முன்னிலையில் சென்று வெளுத்து வாங்குகிறார். அதில் கோபமடைந்த நீதிபதி ஈஸ்வரியை வெளியே அனுப்புமாறு உத்தரவு இடுகிறார். கோபியும் அவரை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். ஈஸ்வரியை அங்கையே இருக்குமாறு சமாதானம் செய்துவிட்டு மீண்டும் உள்ளே செல்கிறார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கிறார் நீதிபதி.


மறுபக்கம், எழில் வண்டியில் வர, அவரை தடுத்து நிறுத்துகிறார் கணேஷ். இதன்போது, ஒரு நிமிஷம் உன் வழில குறுக்க வரவே உனக்கு இவ்வளவு கோவம் வருது, நீ என் வாழ்க்கைல வந்து இருக்கா, என் குடும்பத்தை திருப்பிக் கொடு என எழிலிடம் சண்டை போடுகிறார். எனினும் எழில் அது என் குடும்பம், நீ தான் அத புரிஞ்சி கொள்ளணும் என சொல்லுகிறார். ஆனாலும் நிலாவையும் அமிர்தாவையும் கூட்டி போவேன் என கணேஷ் சொல்ல, உன்னால் முடிஞ்சா கூட்டிப்போ என எழில் சவால் விடுகிறார்.


இன்னொரு பக்கம், நீதிமன்ற வாசலில் ஜெனி தனியாக இருக்கிறார். மறுபக்கம் செழியனை பாக்கியா, எல்லாம் சரியாகிடும் என சமாதானம் செய்கிறார். இதன்போது தனியாக இருக்கும் ஜெனிக்கு விக்கல் ஏற்பட, செழியன் ஓடிச்சென்று காரில் இருந்து தண்ணி கொண்டு போய் கொடுக்கிறார். முதலில் வாங்க மறுத்த ஜெனி, பின்பு அந்த தண்ணியை எடுத்துக் குடிக்கிறார். இதை பார்த்து செழியனும், பாக்கியாவும் சந்தோசப்படுகின்றனர்.



Advertisement

Advertisement