ஒரு மனிதன் இன்றைய காலத்தில் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் உள்ளதா? என்பதை மையக் கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் திரு மாணிக்கம். இந்த திரைப்படம் எதிர்வரும் 27ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'பொம்மக்கா' பாடல் மற்றும் டீசர் என்பன ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. மேலும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜி5 நிறுவனம் வாங்கி உள்ளது.
இந்த நிலையில், திரு மாணிக்கம் படத்தில் நடித்துள்ள சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வின் போது வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
d_i_a
அதில் அவர் கூறுகையில், இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? ஆனா எனக்கு கிடைச்சு இருக்கு.. பாரதிராஜாவுக்கு மகளாக நடித்துள்ளேன். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு நன்றி.
இது என்னுடைய முதலாவது படமாக காணப்படுகின்றது. எனக்கு இந்த படம் ஒரு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. பாரதிராஜாவுக்கு மகளாக நடித்ததை நினைத்து நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதனால் வெளியில் உள்ளவர்கள் என்னை பாராட்டியதை நான் மோட்டிவேஷனாக எடுக்கின்றேன்.
மேலும் நான் என்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பண்ண வேண்டும். எனவே எப்போதும் எனக்கு இதே போல சப்போர்ட் பண்ணுங்கள் என தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன குறும்படங்களில் நடித்து வந்த ரேஷ்மா அதற்குப் பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார் . தற்போது வெள்ளித்திரையிலும் அவருக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நினைத்து ரேஷ்மாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!