பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் 84 நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதியாக டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில், அதில் அன்சிதாவும் ஜெஃப்ரியும் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்கள்.
இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் எனக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை, இவர்களுக்கு போடாதீர்கள்.. என்று நீங்கள் சொல்லும் போட்டியாளர் யார் என ஹவுஸ்மேட்சிடம் கேள்வி எழுப்பியுள்ளார் விஜய் சேதுபதி.
d_i_a
அதற்கு முதலில் ராணாவுக்கு மட்டும் தயவுசெய்து ஓட்டு போடாதீங்க என்று தீபக் சொல்லுகின்றார். மேலும் விஷாலுக்கு ஓட்டு போடக்கூடாது என்று மக்கள் கிட்ட கேட்டுக் கொள்கிறேன் என ஜாக்குலின் சொல்லுகின்றார்.
அதற்கு காரணம் விஷால் இந்த வீட்டில் ரொம்ப சேப்பா கேம் விளையாடுகிறார், இன்னொருத்தங்களை முன்னாடி வச்சு தான் பின்னாடி சேப்பா இருந்து விளையாடுவது போல தெரிகிறது. இதனால் விஷாலுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று ஜாக்குலின் சொல்லுகின்றார்.
இறுதியில் முத்துக்குமரன் தயவு செய்து சௌந்தர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க.. எல்லாரும் தங்கள் உழைப்பை கொட்டி வரும்போது இவர் ஏதோ அசால்டா இவ்வளவு தூரம் வந்து விட்டாரோ என்று தோன்றுகின்றது என்று சொல்லுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..
Listen News!