• Mar 13 2025

பாடு சுசி.. பாடு.!! மீண்டும் கம்பேக் கொடுத்த சுசித்ரா.!! இன்ஸ்டாவில் வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் பிரபல பாடகியாக காணப்பட்ட சுசித்ரா, சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

சுஜி லீக்ஸ் என்ற இணையதளத்தின் ஊடாக த்ரிஷா, தனுஷ், ஆண்ட்ரியா, ஹன்சிகா போன்ற பல முன்னணி பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் அவரை விவாகரத்தும் பண்ணினார்.

d_i_a

இதை தொடர்ந்து நீண்ட நாட்களாக சுசித்ரா மீடியா பக்கமே வராமல் இருந்தார். மேலும் அவருக்கு மனநோய் இருக்குது என்று பல கருத்துக்களும் பரவி இருந்தன. சமீபத்தில் தனுஷுக்கும் கார்த்திக்குமாருக்கும் தொடர்பு இருக்கு, அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று சொல்லி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார்.


அது மட்டும் இல்லாமல் விஜய், ஷாருக்கான் போன்ற முன்னணி நட்சத்திரங்களை பற்றியும் தவறான கருத்துக்களை பரப்பி இருந்தார். 

மேலும் கங்குவா படத்தின் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு எதிராக ஜோதிகா கொந்தளித்த நிலையில், சூர்யாவை நான் தான் திருமணம் செய்திருக்க வேண்டும், இந்த பொம்பளைய சூர்யா ஏன் திருமணம் செய்தாரோ தெரியவில்லை என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்த நிலையில், சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாடு சுசி.. பாடு.. கம்பேக் சுசித்ரா என்று சொல்பவர்களுக்கு பாடல் ஒன்றை பாடி பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்கள் பாடாமலே இருந்திருக்கலாம் என்று கமெண்ட் பண்ணி  வருகின்றார்கள்.

Advertisement

Advertisement