• Apr 18 2026

என்னமா ஆட்டம் போடுது இந்த பொண்ணு! கிளாமர் குத்தாட்டம் போடும் பிகில் பட நடிகை!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை ரேபா மோனிகா தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் சூப்பரான பாடலில் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


கடந்த ஆண்டு கல்யாண் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'மேட்'. இது இவர் இயக்கிய முதல் படமாகும். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்தில் நடிகர் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார், கோபிகா உதயன், விஷ்ணு ஓய் மற்றும் கார்த்திகேய சாமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வசூலிலும் இந்த படம் பட்டையை கிளப்பியது.


இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானநிலையில், தற்போது இதன் 2-வது பாடலான "சுவாதி ரெட்டி" என்ற பாடலில் பிகில் படத்தில் நடித்திருந்த ரேபா மோனிகா நடனமாடியுள்ளார்.  நேற்று மாலை வெளியான இந்த பாடல் இன்று ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்ம பிகில் ஹீரோயினியா இந்த ஆட்டம் போடுறது என ரசிகர்கள் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 


Advertisement

Advertisement